2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் நேற்றைய தினம் (21) F குழுவின் 2 போட்டிகள் நடைபெற்றிருந்தன.
அதில் முதலாவது போட்டியில் தாய்லாந்து மற்றும் ஓமான் ஆகிய அணிகள் மோதியிருந்தன.
இப்போட்டியில் இரு அணிகளும் இந்தவொரு கோல்களும் பெறாத நிலையில் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
ஓமான் அணி அடுத்த போட்டியில் எதிர்வரும் வியாழக்கிழமை கிர்கிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இன்றைய தினம் நடைபெறவுள்ள A குழுவின் முதலாவது போட்டியில் கட்டார் மற்றும் சீனா ஆகிய அணிகள் மோதவுள்ளன.