
சமாதானம் காணும் முன் வீழ்ந்த உயிர்கள் – இஸ்ரேலின் தாக்குதலில் 10 IRGC வீரர்கள் பலி!
ஈரானின் யாசுது மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
இத் தாக்குதலில், குறைந்தது 10 இஸ்லாமிய புரட்சி காவல்படை (IRGC) வீரர்கள் உயிரிழந்ததாக, உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட IRGC உறுப்பினர்களின் சரியான எண்ணிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூன் 13ம் தேதி தொடங்கிய இஸ்ரேலின் அதிரடி தாக்குதலுக்குப் பின்னர், இரான் பெரும் இழப்புகளை சந்தித்து வருகின்றது.
இஸ்ரேல் தரப்பின் தகவலின்படி, கடந்த தாக்குதல்களிலிருந்து இதுவரை இரான் இராணுவத்திற்குச் சொந்தமான 24க்கும் மேற்பட்ட உயர் நிலை தளபதிகள் மற்றும் அணுஆய்வுத்துறை விஞ்ஞானிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இத்தகைய தாக்குதல்கள், மத்திய கிழக்கில் அதிகரிக்கும் மோதல்களின் மையப்புள்ளியாக மாறியுள்ளன.
சமீப காலமாக, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான நிலைமை மேலும் பதற்றத்துக்குள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.