தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு பல நன்மைகளை வழங்கி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்துள்ளார்.
அஸ்வசும திட்டத்தின் கீழ் அனைத்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களும் நன்மைகள் பெறுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இது சமுர்த்தி மானியத்தின் மூன்று மடங்கு நன்மைகளைக் கொண்டுள்ளது. சகல துறைகளையும் உள்ளடக்கிய அபிவிருத்தி திட்டங்கள் தற்போது நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
Post Views: 2