சமூக வலைத்தளங்கள் இளைஞர்களிடையே மனநல பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதால் அனைவரும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அமெரிக்க மருத்துவரான விவேக் மூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் 13 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களில் 95 சதவீதமானோர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் அமெரிக்காவில் செயல்படும் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் எச்சரிக்கை முத்திரையினை வெளியிடுமாறு அவர் அமெரிக்க காங்கிரஸிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post Views: 4