அனைவருக்கும் கல்வி எனும் தொனிப்பொருளில் சமூர்த்தி திணைக்களத்துடன் இணைந்து தேசிய சமூக வளர்ச்சி நிறுவனம் கிராம மட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு சர்வதேச மொழி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று (05) கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக வளாகத்தில் ஆங்கில டிப்ளோமா பாடநெறி ஆனது சமூர்த்தி குடும்பங்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 40 மாணவர்களுக்கு 150 மணி நேரம் ஆங்கில டிப்ளோமா பயிற்சி வழங்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
மேலும் இந்த பயிற்சி நேற்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பெண்கள்,குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக அதிகார அமைச்சின் கீழ் தேசிய சமூக வளர்ச்சி நிறுவனத்தினால் ஆங்கில டிப்ளோமா கற்கை நெறி நேற்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட சமூர்த்தி திணைக்களத்தின் ஒழுங்கு படுத்தலில் தேசிய சமூக வளர்ச்சி நிறுவனத்தினால் ஆங்கில டிப்ளோமா பயிற்சி நெறி தொடக்க நிகழ்வு கிளிநொச்சியில் உள்ள தேசிய சமூக வளர்ச்சி நிறுவனத்தின் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவேல் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரவீந்திர விதானாராச்சி கலந்து கொண்டு சிறப்பித்த உள்ளதுடன்,கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் கேதீஸ்வரன் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி இன்பராஜா உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.