Tamil News Channel

சரியானதை செய்வது எப்போதும் அரசியல் ஆதாயமாக மாறாது: எரான் விக்கிரமரட்ண..!

405dsri_1643_22082018_KAA_CMY

ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவின் தலைமையில் கட்சியின் எதிர்கால பொருளாதார திட்டம் நேற்று(04.09) இரவு தொழில்முறை மற்றும் வணிக சமூகத்திற்கு வெளியிட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கட்சியின் பொருளாதார மூலவர்களான ஹர்ச டி சில்வா, எரான் விக்கிரமரட்ண, கபீர் ஹாசிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ண, ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் சர்வதேச நாணயநிதியத்துடனான சமீபத்தைய திட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்கால ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் வர்த்தக நடவடிக்கைகளில் குறுக்கிடாது.

மாறாக வர்த்தக நடவடிக்கைகளிற்கு ஏதுவான சூழலை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்துவோம். சர்வதேச நாணயநிதியத்துடனான சமீபத்தைய திட்டம் தொடரவேண்டும். நுண்பொருளாதார அளவில் மாற்றங்கள் அவசியம். ஆனால் சமூக ஸ்திரதன்மையும் அவசியமும்.

இலங்கையின் வெளிவிவகார கொள்கை ஒருபோதும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடாது. இந்திய துணைக்கண்டத்திலிருந்து வருடாந்தம் 2 மில்லியன் சுற்றுலாப்பயணிகளை கவரும் இலக்கை இலங்கை கொண்டிருக்கவேண்டும்.

இலங்கைகையை பொறுத்தவரை முக்கிய பிரச்சினை என்னவென்றால் சட்டத்தின் ஆட்சியை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தினால் வெளிநாடுகளின் அதிகளவு முதலீடுகளையும் நம்பிக்கையையும் பெறலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts