சருமத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனே மனம் பதைபதைத்து விடும் அல்லவா..!
அதிலும் குறிப்பாக விட்டலிகோ எனப்படும் வெண்புள்ளிகள். இது சருமத்தில் எந்த இடத்திலும் வரக்கூடியது.
வெண்புள்ளி எனப்படுவது மெலனின் நிறமி இழப்பாக பார்க்கப்படுகிறது. ஆனால், இது ஏற்படுவதற்கான தெளிவான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
மரபணு நரம்பு மண்டல பாதிப்பு வைரஸ் கிருமிகளின் தாக்கத்தால் இந்த வெண்புள்ளி ஏற்படலாம் என கூறப்படுகிறது.
இது ஏற்படாமல் தடுப்பதற்கு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தக்கூடிய உணவுகளான மீன், இறைச்சி, தானியம், கோதுமை கலந்த உணவுகள் ஆகியவற்றை உண்ண வேண்டும்.
இது தாமிரச்சத்து மெலனின் அளவை அதிகரிக்கும்.
மேலும் விட்டமின் ஏ அதிகம் நிறைந்துள்ள பச்சைக் காய்கறிகள், கீரைகள், மாம்பழம், பப்பாளி, உருளைக்கிழங்கு, மஞ்சள் காய்கறிகள், சிவப்பு காய்கறிகள் போன்றவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
விட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ள, கடலுணவுகள், சூரியகாந்தி விதை, வேர்க்கடலை, பீட்ரூட், அவகாடோ போன்றவற்றையும் உண்ண வேண்டும்.
அதுமட்டுமின்றி மன இறுக்கம் இல்லாமல் இருக்க வேண்டும்.
அதிகமான சூரிய ஒளியில் வெளியில் செல்லக்கூடாது.
இரசாயனம் கலந்த க்ரீம் வகைகள், ஷெம்பூ போன்றவற்றை முடிக்கோ அல்லது சருமத்துக்கோ உபயோகப்படுத்தக் கூடாது.
மேற்குறிப்பிட்டவற்றை பின்பற்றி வந்தால் உடலில் மெலனின் அளவு குறையாமல் இருப்போதோடு, வெண்புள்ளியை நினைத்து பயப்படவும் தேவையில்லை.