வறண்ட சருமம் பளபளக்க: தினமும் சாப்பிடும் உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும். தினமும் 1 ஸ்பூன் அளவு தேன் சாப்பிடவும். இரவு தூங்குமுன் 1 டம்ளர் பால் குடிக்க வேண்டும்.
மத்திய உணவில் சிறிது தயிர் சேர்த்துக்கொள்ளவேண்டும். வாரத்தில் 3-4 நாட்கள் லெமன் ஜூஸ் குடிக்கலாம் (குளிர் காலத்தில் தவிர்க்கவேண்டும்).
நித்தம் ஒரு ஆப்பிள் சாப்பிடலாம். காரட் மற்றும் வெங்காயத்தை சாலட் போல் கலந்து அடிக்கடி காலையில் சாப்பிடலாம். வாரத்தில் 2 முறை ஸ்பூன் வெண்ணெய் சாப்பிட்டு வரலாம்.
தினமும் இரவில் படுக்கும் போது ஆலிவ் எண்ணெய் தேய்த்து கொள்ளுங்கள்.
வாரத்தில் 1-2 முறை ஆலிவ் எண்ணெய் முகத்தில் தேய்த்து 1/2மணி நேரம் கழித்து முகம் கழுவினால், தோல் அழகாக இருக்கும். ஃபேஸ் பேக்: அரிசி மாவு, தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி 5 நிமிடம் ஊறவைத்து, பின் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.
கடலை மாவு, 3-5 தூளி தேன் கலந்து முகத்தில் கரும்புள்ளி உள்ள இடத்தில் பூசிவர கரும்புள்ளி மறையும். முழங்கை, மற்றும் முழங்காலில் பூசலாம் நல்ல பலன் தரும்.
பச்சை பயிறு மாவு, சிறிது பால், தேன், பண்ணீர் நீர் கலந்து முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊறவைத்து, பின் கழுவினால், முகம் பளபளவென்று இருக்கும்.
வறண்ட சருமத்திற்கு பாலில் கசகசாவை ஊறவைத்து மைய அரைத்து, 10 நிமிடம் பூசி பின் முகம் கழுவினால் நல்ல தீர்வு கிடைக்கும்.
பால் ஏடு, அல்லது உருளைக்கிழங்கு மைய அரைத்து, 10 நிமிடம் முகத்தில் தடவி பிறகு கழுவவேண்டும் சருமம் மென்மையாக இருக்கும்.