மருந்துகளின் அவசியத் தன்மையுடன் தங்களுக்கு வழங்கப்பட்ட தரவுகளுக்கு அமைய, கொள்கை அடிப்படையிலேயே, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த மருந்து இறக்குமதிக்கான அமைச்சரவை யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அத்துடன் சர்ச்சைக்குரிய மருந்து கொள்வனவு தொடர்பில் முந்தைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி வழங்கியமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே தாம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இது தொடர்பில் சமூக ஊடகங்களில் பல பொய்யான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.