November 18, 2025
சர்ச்சை பிரபலத்தை களமிறக்கும் விஜய் டிவி.. பிக் பாஸ் ..!
சினிமா புதிய செய்திகள்

சர்ச்சை பிரபலத்தை களமிறக்கும் விஜய் டிவி.. பிக் பாஸ் ..!

Jun 12, 2024

விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. ஏற்கனவே நடந்து முடிந்த 7ம் சீசன் பெரிய அளவில் சர்ச்சைகளை சந்தித்தது.

கமல்ஹாசனே மாயா பூர்ணிமா கேங்கிற்கு ஆதரவாக இருக்கிறார் என சர்ச்சை எழுந்த நிலையில் கடுமையாக கமலை நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.

தற்போது பிக்பாஸ் 8ம் சீசனுக்கான பணிகளை டீம் தொடங்கி இருப்பதாக தகவல் வந்திருக்கிறது. மேலும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் வேலையும் தொடங்கி இருக்கிறதாம்.

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி சிறைக்கு சென்று வந்த டிடிஎப் வாசன் உடன் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. அவரது காதலி ஷாலின் ஸோயா தற்போது குக் வித் கோமாளியில் போட்டியாளராக வந்திருக்கிறார். அவருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

அதனால் டிடிஎப் வாசன் மற்றும் அவர் காதலி ஷாலின் ஸோயா ஆகிய இருவரையுமே பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களாக கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *