Tamil News Channel

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் விருது 2023

2023 ஆம் ஆண்டிற்கான பாலின சமத்துவம், பன்மைத்துவம் மற்றும் உள்ளடக்கிய சம்பியனுக்கான சர்வதேச ஒலிம்பிக் குழுவின் விருதுகளை பெறுபவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியானது.

ஆபிரிக்கா, அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் ஓசியானியா ஆகிய நாடுகளுக்கு தலா ஒரு விருது வீதமும் உலக அளவில் ஒரு விருது வீதமும் வழங்கப்படுகின்றது.

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிற்கான உலக விருதுக்கு ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் டென்னிஸ் வீரரும் தற்போதைய டென்னிஸ் நிர்வாகியுமான கத்ரீனா ஆடம்ஸ் (Katrina Adams) பெயரிடப்பட்டுள்ளார்.

விளையாட்டின் அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக பெண்கள் மற்றும் பெண்களுக்கு விதிவிலக்கான முன்னேற்றங்களில் ஆடம்ஸ் முன்னணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆசிய பிராந்தியத்திற்கான விருது இலங்கையின் சாகசக்காரர் மற்றும் மலை ஏறுபவருமான ஜயன்தி குரு-உத்தும்ப்பலாவுக்கு (Jayanthi Kuru-Utumpala) வழங்கப்பட்டுள்ளது.

எவரஸ்ட் மலை உச்சியை அடைந்த முதலாவது இலங்கை மலையேறி ஜயன்தி குரு-உத்தும்ப்பலா ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுமிகள் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவந்துள்ள ஜயன்தி, தேசிய ஒலிம்பிக் குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட பாதுகாப்புமிக்க விளையாட்டுக் கொள்கைக்கான முறையீட்டுக் குழுவின் முதலாவது தலைவருமாவார்.

மேலும், ஆபிரிக்க பிராதியத்திற்கான விருது கென்யாவைச் சேர்ந்த முன்னாள் தடகள விளையாட்டு வீரர் மற்றும் சான்றளிக்கப்பட்ட உலக தடகள பயிற்சியாளரான ஐரீன் லிமிகாவிற்கு (Irene Limika) வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அமெரிக்க பிராந்தியத்தில் இருந்து சிலி நாட்டின் முன்னாள் விளையாட்டு வீரர், வழக்கறிஞர், சிலி ஜூடோ கூட்டமைப்பின் தலைவர் மற்றும் சிலி NOC பாதுகாப்பு விளையாட்டு அலுவலகத்தின் தலைவருமான மரியாலொரெடோ கொன்ஷலஷ் ஜாக் (Marialoreto Gonzalez Jaque) தெரிவாகியிருந்தார்.

ஐரோப்பிய பிராந்தியத்தில் இருந்து இவ்விருதிற்கு பிரான்ஸ் நாட்டின் ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் ரோயிங் வீரரும் லெஸ் ஸ்போர்ட்டிவ் மீடியா (Les Sportive Media) குழுமத்தின் பொது மேலாளர் மற்றும் ஆலிஸ் மில்லியட் (Alice Milliat) அறக்கட்டளையின் தலைவருமான ஆரலி ப்ரஸ்ஸன் (Aurelie Bresson) பெயரிடப்பட்டுள்ளார்.

மேலும் ஓசியானியா பிராந்தியத்தில் இருந்து அவுஸ்திரேலியாவின் தடகள வீரர் மற்றும் ஏதென்ஸ் 2004, பிரிஸ்பேன் 2032 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டு வாரிய உறுப்பினருமான பெட்ரிக் ஜோன்சன் (Patric Johnson) பெயரிடப்பட்டுள்ளார்.

இவ்விருதுகள் ஆண்டுதோறும் பங்கேற்பு, தலைமைத்துவம், பாதுகாப்பான விளையாட்டு, சித்தரிப்பு மற்றும் வள ஒதுக்கீடு ஆகிய துறைகளில் பாலின சமத்துவம், பன்முகத்தன்மை மற்றும் விளையாட்டில் உள்ளடக்கிய சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் தனிநபர்களுக்கு வழங்கப்படுகின்றன.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts