சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாம்கட்ட கலந்துரையாடல் வெற்றிபெற்றுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தின் மூன்றாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்கள் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (22.11.2024) நடைபெற்றிருந்தன.
சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர் தலைமையில் சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழு கலந்துகொண்டது.
இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமை தாங்கினார்.
அதன்படி, சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான மூன்றாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக முடிவடைந்தன.