Tamil News Channel

 சர்வதேச ரீதியில் யாழ். மாணவன் சாதனை

2023ம் ஆண்டு டிசம்பர் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மலேசியாவில் சர்வதேச மனக் கணிதப் போட்டி இடம்பெற்றது.

இப் போட்டியில் உலகளாவிய ரீதியிலே 80 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேந்ந்த 2,500 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 62 மாணவர்கள் இதில் பங்குபற்றியிருந்தனர்.

இதில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ருஷாந் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

யாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் இயங்கும் UCMAS கிளையில் பயிலும் மாணவனும் ஆவார்.

இலங்கை சார்பில் கலந்து கொண்டு Champion பட்டத்தை பெற்ற ஒரே ஒருவர் இவர் என்பது பெருமைக்குறிய விடயமாகும்.

இதில் கிருபாகரன் தர்சானந், செந்தில்நாதன் சேசாளன், கஜேந்திரன் லவின், வானதி சிவநேசன் ஆகியோர் சர்வதேச ரீதியாக மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts