Thursday, March 12, 2026

சர்வதேச விசாரணைகளிற்காக கத்தோலிக்க திருச்சபை..!

Must Read

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதற்காக வெளிநாட்டு அரசசார்பற்ற அமைப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிடம் யோசனையொன்றை கத்தோலிக்க திருச்சபை முன்வைக்கப்படவுள்ளது.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை இந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை நாடவுள்ளது

ஐந்து வருடங்களாகியுள்ள போதிலும் இந்த தாக்குதலின் சூத்திரதாரிகள் யார் இந்த தாக்குதலின் பின்னால் உள்ள  சதிமுயற்சிகள் என்ன என்பது போன்ற விடயங்களை முன்னைய தற்போதைய அரசாங்கங்கள் வெளிப்படுத்த தவறிவிட்டன என அவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி நிலைநாட்டப்படும் என்ற தனது வாய்மூல வாக்குறுதியை  நிறைவேற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தவறியுள்ளதால் ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் வழங்கியுள்ள வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்துள்ளேன் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் இடம்பெற்றவேளை பிரதமராக பதவி வகித்த ரணில்விக்கிரமசிங்க தற்போது ஜனாதிபதியாக உள்ளார் அவ்வேளை கொழும்பிற்கு பொறுப்பான பிரதிபொலிஸ்;மா அதிபர் தேசபந்து  தென்னக்கோன்  பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றவேளை  தனது கடமைகளை நிறைவேற்றாமல்  வெறுமனே தகவல்களை கொண்டு செல்பவராக காணப்பட்டார் என உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது அவர் தற்போது பொலிஸ்மா அதிபராக பதவி வகிக்கின்றார் எனவும் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img
Verified by MonsterInsights