சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 14 நாள் பயணமாகச் சென்ற இந்தியாவைச் சேர்ந்த குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, ஜூலை 14ஆம் திகதி பூமிக்கு திரும்பும் பயணத்தைத் தொடங்கவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் விண்வெளியிலிருந்து வீடு திரும்புவதற்கு சில நாட்களுக்கு முன்பு, அவரும் மற்ற குழு உறுப்பினர்களும் விருந்தில் கலந்துகொண்டனர்.

இதன் புகைப்படங்களை சுற்றுப்பாதை ஆய்வகத்திலிருந்து மக்கள் பார்வைக்காக வெளியிட்டுள்ளது.
புதிதாக வெளியிடப்பட்ட படங்களில், சுக்லாவும் அவரது சகாக்களும் பூஜ்ஜிய ஈர்ப்பு விசை காரணமாக ஆய்வகத்திற்கு மிதந்தபடி செல்வது, புன்னகை மலர அனைவரும் உணவை ரசிப்பது போன்றவற்றை புகைப்படங்களில் காண முடிகிறது.



