
சர்வதேச விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள தனுஷின் கேப்டன் மில்லர்!
மிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படமானது சர்வதேச விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் மற்றும் இயக்குனர் என பல திறமைகளை வைத்துள்ளார்.
சமீபத்தில் திருச்சிற்றம்பலம் மற்றும் வாத்தி என்ற திரைப்படம் போதியளவு வெற்றியை பெற்று தராததால், அவர் மடியான் படத்திற்கு பிறகு மிகவும் வித்தியாசமாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார். இது ரசிகர்களிடையில் நல்லதொரு வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்கினார்.
தனுஷ் தவிர, மார்க் பென்னிங்டன், நாசர், சிவராஜ்குமார், பிரியங்கா அருள்மோகன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருந்தார்கள்.