ஜானாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்னாயக்கவின் வாகன தொடரணியை 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்தமையால் கொள்ளுப்பிட்டி பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர்.
குறித்த இளைஞர் பொத்துவில் பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் இவரிடமிருந்து கையடக்க தொலைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட இளைஞர் 44 வயதுடைய நபர்ரொருவருடன் துபாய் தூதரகத்திற்கு வருகை தந்தவர் எனவும், இதற்கு முன் இவ்வாறான வாகன தொடரை கண்டதில்லை என்பதால் கையடக்கதொலைபேசியில் காணொளி எடுத்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Post Views: 2