November 18, 2025
சாதனை படைத்த இலங்கை தமிழ் பெண் எழுத்தாளர்..!
Updates World News புதிய செய்திகள்

சாதனை படைத்த இலங்கை தமிழ் பெண் எழுத்தாளர்..!

May 15, 2024

அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை தமிழ் வம்சாவளி எழுத்தாளரான வி.வி.சுகி கணேசநந்தன் எழுதிய பிரதர்லெஸ் நைட் (Brotherless Night) என்ற நாவல், புனைக் கதைக்கான 2024 கரோல் ஷீல்ட்ஸ் (Carol Shields) பரிசை வென்றுள்ளது.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடையும் வாரத்தில் தமக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், தாம் விரும்பாதவர்களின் கைகளில் அடக்குமுறையை எதிர்கொள்ள போராடும் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக சுகி கணேசநந்தன் தெரிவித்துள்ளார்.

இதற்காக அவருக்கு 150,000 டொலர்கள் பரிசு வழங்கப்பட்டது.

அத்துடன் அவர் கனடாவின் நியூஃபவுண்ட்லாந்தில் உள்ள ஃபோகோ தீவு விடுதியில் வசிப்பிடத்தையும் பெற்றுள்ளார்.

இதற்கமைய 1980ஆம் ஆண்டு பிறந்த வி. வி. சுகி கணேசநந்தன், ஒரு அமெரிக்க புனைகதை எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளர் ஆவார் என்பது குறிப்பிடதக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *