கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் ஆங்கிலப் பாட வினாத்தாள் WhatsApp ஊடாக பகிரப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி – கட்டுகஸ்தோட்டை பகுதியில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆங்கிலப் பாட வினாத்தாள் பகிரப்பட்ட WhatsApp குழுவின் 61 வயதுடைய நிர்வாகியொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 9ஆம் திகதி ஆங்கிலப் பாடத்திற்குரிய பரீட்சை இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அந்த வினாத்தாள் WhatsApp குழுக்களினூடாக பகிரப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.