கல்வியை கற்க வயது ஒரு தடை இல்லையென 80 வயது முதியவர் ஒருவர் நிரூபித்துள்ளார். நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 80 வயது முதியவர் ஒருவர் பரீட்சை எழுதிய சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாணந்துறை, கிரிபெரிய பகுதியை சேர்ந்த 80 வயதான நிமல் சில்வாவே என்ற முதியவரே இவ்வாறு கா.பொ.த சாதாரணபரீட்சை எழுதியுள்ளதாகவும், இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற அவர் விசேடமாக கணித பாட பரீட்சையில் தோற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.