2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான தகுதி பெற்ற அணிகளின் விபரங்களை ஐ . சி . சி வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு சர்வதேச ஒருநாள் உலகக்கிண்ண போட்டியில் பங்குபற்றிய இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் தவிர்ந்த ஏனைய 8 அணிகளும் இந்த போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த தொடரை நடாத்தும் பாகிஸ்தான் அணியுடன் சேர்த்து, நடப்பு உலகக் கிண்ண தொடரில் முதல் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 7 இடத்தைப் பெறும் அணிகளை சேர்த்து 8 அணிகள் இத்தொடரில் பங்கு பற்றும் என ஐ. சி . சி ஏற்கனவே அறிவித்திருந்தது.
புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் அணி 5 ஆம் இடத்தை பிடித்திருப்பதால் அதை தவிர்த்து முன்னிலையில் உள்ள இந்தியா, தென்னாபிரிக்கா, அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் இத்தொடருக்கு தெரிவாகியுள்ளது.
புள்ளிப்பட்டியலில் இறுதி இரண்டு இடங்களை பிடித்திருப்பதால் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் இத் தொடருக்கு தெரிவாகவில்லை.
இப்போட்டிகள் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பாகிஸ்தானில் இடம்பெறவுள்ளது.