அம்பாறை மாவட்டம் கல்முனை பொலீஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்று (31.05) 10கிராம் 200 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 59 வயதான நபர் ஒருவர் பெரியநீலாவணை விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் மருதமுனை பெரியநீலாவணை விஷேட அதிரடிப்படையிளருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட விஷேட அதிரடிப்படையினர் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
இவரிமிருந்து வியாபாரத்திற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் கையடக்கத் தொலைபேசியும் கைப்பற்றப்பட்டதுடன் மேலதிக நடவடிக்கைக்காக கல்முனைப் பொலீசாரிடம் ஒப்டைக்கப்பட்டுள்ளார். இத் தகவலை எமது அம்பாறை நிருபர் வழங்கியுள்ளமை குறிப்பிடதக்கது.