
சாரதியில்லாமல் பயணித்த தொடருந்து..!
இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் சரக்கு தொடருந்து ஒன்று சாரதியின்றி பயணித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் கதுவா தொடருந்து நிலையத்தில் சரக்கு தொடருந்தின் சாரதி ஹேண்ட் பிரேக் போடாமல் இயந்திரத்தில் இருந்து கீழே இறங்கியுள்ளார்.
தண்டவாள பாதை சாய்வாக இருந்ததால் திடீரென அந்த சரக்கு தொடருந்து பதான்கோட் நோக்கி சுமார் 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்து சுமார் 70 கிலோ மீற்றர் தூரம் சென்றுள்ளது.
இதனால் தொடருந்தை நிறுத்த முடியாமல் தொடருந்து சாரதி மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குறித்த சரக்கு தொடருந்தானது பஞ்சாப் முகேரியன் ஹோஷியார்பூரில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இது குறித்து விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.