February 11, 2026
சாலி நளீம் எம்.பியின் இராஜினாமா குறித்து சபாநாயகரின் அறிவிப்பு..!
Top இலங்கை அரசியல் உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

சாலி நளீம் எம்.பியின் இராஜினாமா குறித்து சபாநாயகரின் அறிவிப்பு..!

Mar 15, 2025

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சாலி நழீம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் இன்று (15/03/2025) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏறாவூர் நகரசபைக்கு போட்டியிடுவதற்காக தான் பதவி விலகுவதாக சாலி நழீம் நேற்று (14/03/2025) விசேட உரையொன்றை நிகழ்த்தி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *