January 23, 2026
சாவகச்சேரியில் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பதற்கு தடை!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

சாவகச்சேரியில் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பதற்கு தடை!

Nov 25, 2025

சாவகச்சேரி நகராட்சிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி மன்றத்தின் 6ஆம் மாதாந்திர சபை அமர்வில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
பட்டாசு வெடிப்பது காரணமாக பொதுப் போக்குவரத்து பாதிப்பு, வர்த்தக நிலையங்களில் தீப்பரவல் அபாயம் மற்றும் சுற்றுப்பிரதேசங்கள் அசுத்தமடைவது குறித்து உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர்.

தவிசாளர் தெரிவித்ததாவது:
மயான அனுமதி வழங்கும் போது, “நகர் எல்லைக்குள் பட்டாசு வெடிக்க தடை” என எழுத்து மூல அறிவுறுத்தல் வழங்கப்பட்டாலும், இதுவரை பின்பற்றப்படவில்லை. எனினும் இனி இந்தத் தடை கடுமையாக அமுல்படுத்தப்படும்.

தடை மீறுபவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை ஆபத்துக்குள் இட்டதற்காக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *