சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் நலன் கருதி இன்று புதன்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுடைய ஏற்பாட்டில் தற்காலிக மின்பிறப்பாக்கி ஒன்று வைத்தியசாலை நிர்வாகத்திடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ரஜீவ் கருத்துத் தெரிவிக்கையில்;

வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட அவசர சிகிட்சைப் பிரிவு மற்றும் மகப்பேற்றுப் பிரிவுகளுக்கு மின்பிறப்பாக்கி இல்லாத நிலையில் தற்காலிக ஏற்பாடாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களால் மின்பிறப்பாக்கி ஒன்று புதன்கிழமை பெற்றுத்தரப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து மேலும் சில வாரங்களில் நிரந்தர மின்பிறப்பாக்கி வருகைதரவுள்ள நிலையில் அதுவரையில் மின்தடைப்படும்  வேளையில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க நடவடிக்கை எடுத்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் அவர்களுக்கு  நன்றிகள்.என மேலும் அவர் தெரிவித்திருந்தார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here