February 9, 2026
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக நபரொருவர்  பொலிஸாரால் இன்று கைது!
புதிய செய்திகள்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக நபரொருவர்  பொலிஸாரால் இன்று கைது!

Jul 15, 2024

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகராக இருந்த இராமநாதன் அர்ச்சுனா மீண்டும் இன்று வருகிறார் என தெரிவிக்கப்படும் நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலைப் பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வைத்தியசாலை முன்பாக நின்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி வைத்தியசாலை முன்பாக அண்மையில் பொதுமக்கள் கூடி பெருமளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மீண்டும் இன்று பொதுமக்கள் கூடலாம் என்ற நிலையில்  முன்னெச்சரிக்கையாக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனையும் மீறி சாவகச்சேரி பதில் வைத்திய அத்தியட்சகராக இருந்த இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *