சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் வழிகாட்டலின் கீழ் செயல்பட்டுவரும் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல் தடுப்பு பிரிவின் தொடர் நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோத மணல் கடத்தல்களில் ஈடுபடுவோர் தொடர்ந்து கைது செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, கிளிநொச்சி பிரதேசத்திலிருந்து சட்டவிரோதமாக ஆற்றுமணல் ஏற்றி வந்த டிப்பர் ஒன்று பொலிஸாரால் நிறுத்தப்பட்டபோது, அதன் சாரதி வாகனத்துடன் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். எனினும், பொலிஸாரின் வாகன துரத்தலுக்குப் பிறகு, குறித்த டிப்பர் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், தொடர்ந்து சோதனைகளில் இரு டிப்பர்கள் மேலதிகமாக கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் சாரதிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறித்த சாரதிகள் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சட்டவிரோத மணல் கடத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்காக சாவகச்சேரி பொலிஸார் மேற்கொள்ளும் இந்த ஒழுங்குமுறை நடவடிக்கைகள், பொது மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(யாழ் நிருபர்-லோயன் விஜய்குமார்)



