வடமேற்கு சிரியாவில் உள்ள தர்குஷ் நகருக்கு அருகே பாடசாலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஆதரவற்றோருக்கான பாடசாலையில் இருந்து மாணவர்கள் மற்றும் சில ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று ஒரண்டஸ் ஆற்றங்கரை வழியாக மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் உள்ள ஆற்றில் விழுந்துள்ளது.
இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் குழந்தைகள் உட்பட 20 பேர் காயமடைந்துள்ளனர்.
பேருந்து சாலையை விட்டு விலகிச் சென்றமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்றும் விபத்து குறித்து காவல் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.