வெற்றி வசந்த்- வைஷ்ணவி தம்பதிகளின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வெற்றி வசந்த்
சின்னத்திரையில் மிகவும் ஹிட்டான தொடர்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை.
இதில் கதாநாயகராக நடிகர் வெற்றி வசந்த்தும், நாயகியாக கோமதி ப்ரியாவும் நடித்து வருகிறார்கள். இந்த ஜோடி சேர்ந்து நடித்து வரும் சிறகடிக்க ஆசை தொடர் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாதப்படி ஓடிக் கொண்டிருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகியிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது வெற்றி வசந்த்- வைஷ்ணவி தம்பதியின் Haldi ceremony புகைப்படங்கள் மற்றும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
கோலாகலமாக நடந்து முடிந்த திருமணம்
இந்த நிலையில், இன்றைய தினம் நவம்பர் 28ஆம் தேதி, நடிகர் வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவி சுந்தர் திருமணம் சிறப்பாக சென்னையில் நடந்து முடிந்திருக்கிறது.
இந்த திருமணத்தில் இவர்களின் குடும்பத்தினர் மற்றும் சீரியல் பிரபலங்களும் பங்கேற்றுள்ளனர்.
தற்போது இந்த ஜோடிக்கு பிரபலங்கள் மட்டுமில்லாமல் ரசிகர்களும் தங்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.