மட்டக்களப்பு வாழைச்சேனை மஜீமா நகர்ப் பகுதியில் 13 வயது சிறுமியைத் தாக்கிய அவரது சிறிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியைத் தாக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
கைதானவர் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலுக்குள்ளான சிறுமியின் தாய், அவரது தந்தையை பிரிந்து பணிப் பெண்ணாக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து அந்த சிறுமியின் தந்தை மறுமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் சிறுமியின் சிறிய தாய் அவரை தாக்கியுள்ளதுடன், குறித்த சிறுமி வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Post Views: 2