கண்டி, பதியபெலெல்ல, நுகயாய பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் சிறுத்தை ஒன்று நடமாடுவதால் பிரதேசவாசிகள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.
இந்த சிறுத்தை, மான் போன்ற பல்வேறு விலங்குகளை வேட்டையாடுவதையும், வீடுகளில் வளர்க்கப்படும் நாய், மாடு போன்ற விலங்குகளை பிடித்து உண்பதையும் பிரதேசவாசிகள் கண்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கும், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கும் ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த பிரச்சனைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், பொது மக்கள் மற்றும் குழந்தைகளின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.