
சிறுமியின் ஆபாச காணொளியை இணையத்தில் பதிவிட்ட சிறுமியின் காதலன்…!
14 வயது சிறுமியின் ஆபாச காணொளியை இணையத்தில் பதிவிட்ட காதலன் கைது செய்யப்பட்டுள்ளதாக மீகஸ்வெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி கைது செய்யப்பட்டவர் பொலன்னறுவை, அம்பகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரான சிறுமியின் காதலன் பாதிக்கப்பட்ட சிறுமியுடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ள நிலையில் சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டிற்குச் சென்று சிறுமியுடன் நெருக்கமாக இருந்துள்ளதுடன் அதனைக் காணொளியாக எடுத்துள்ளார்.
இந்நிலையில், சந்தேக நபருக்கும் சிறுமிக்கும் இடையில் பிரிவினை ஏற்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர் சிறுமியின் ஆபாச காணொளிகளை இணையத்தில் பதிவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் ,கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹிங்குராக்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.