மன்னார் தலைமன்னார் கிராமப் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு  நீதி கோரி  அமைதிவழி போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன்  இன்றைய தினம்(19) காலை  குறித்த போராட்டம்  இடம்பெற்றுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதிவழங்கு, விசேட விசாரணை பொலிஸ் குழுவை நியமி, சிறுவர்களை உயிர் போல் காப்போம், இணையவழி பாலியல் துஸ்பிரயோகங்களை நிறுத்துங்கள், எமது சிறுவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் அதே நேரம் சிறுமியின் புகைப்படத்தையும் ஏந்தியவாறு அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here