சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர்கள்!!!

0
3

மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்று காட்டுப்பகுதியில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்;

வெல்லாவெளி பிரதேசத்தைச் சோந்த 15 வயது சிறுமி இவ்வாறு துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி கடந்த 7ம் திகதி தனது வீட்டில் இருந்து அம்மம்மா வீட்டிற்கு சென்று அங்கிருந்து தனிமையில் திரும்பிய வேளை காட்டுப்பகுதியை அண்டிய பகுதியில் வைத்து இரு இளைஞர்கள் கடத்திச் சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததை தொடர்ந்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்யப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் அந்த பகுதியைச் சேர்ந்த 26, 21 வயதுடைய இரு இளைஞர்களை பொலிஸார் நேற்றுமுன்தினம்(13-05-2024) கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here