திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாலத்தோப்பூர் பகுதியில் ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகிச் சுற்றியதில் 8 வயதுடைய மர்சூன் அஷ்பாக் எனும் சிறுவன் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் வீட்டில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் தனியாக ஆடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்,

ஊஞ்சல் கயிறானது சிறுவனின் கழுத்தில் இறுகியதாகவும், அங்கு யாரும் இல்லாததால் சிறுவன் உயிரிழந்ததாகவும் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த சிறுவனை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் நேற்று இரவு சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்று பார்வையிட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here