January 20, 2026
சிறுவர்களுக்கு போஷாக்குக் குறைபாடு: விசேட குழு அறிக்கை…
புதிய செய்திகள்

சிறுவர்களுக்கு போஷாக்குக் குறைபாடு: விசேட குழு அறிக்கை…

Sep 5, 2024

இலங்கையில் மூன்றில் ஒரு பங்கு சிறுவர்கள் போஷாக்குக் குறைபாட்டின் அறிகுறிகளை வெளிப்படுத்துவதாக நாடாளுமன்ற விசேட குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சிறார் போசாக்கு குறைபாடு அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட குழு இந்த அறிக்கையை முன்வைத்துள்ளது.

இதற்குப் பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கல்வி அமைச்சினால் தற்போது 17 இலட்சம் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் மற்றும் முன்பருவ அபிவிருத்தி நிலையங்களில் உள்ள சிறார்களுக்கு உணவு வழங்கப்படுவதாகவும், எதிர்காலத்தில் தரம் 08 க்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு உணவு வழங்குவதற்கு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழியப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டு ஜூன், ஊட்டச்சத்து மாத மதிப்பீட்டிற்குப் பிறகு, நாடளாவிய ரீதியில் பொது சுகாதார மருத்துவச்சிகளில் பதிவு செய்யப்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 96.5 வீதமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, 17.1 வீதம் எடை குறைவாகவும் , 10 வீதம் வளர்ச்சி குன்றியதாகவும் மற்றும் 10.3 வீதம் வளர்ச்சி குன்றிய குழந்தைகளும் இந்த அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *