சிறுவர் உரிமைகள் சமவாயத்திற்கமைய 18 வயதுக்குக் குறைவானவர்கள் அனைவரும் சிறுவர்களாக வரையறுக்கப்படுகின்றனர். சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் மொத்த சனத்தொகையில் சுமார் 30% பேர் சிறுவர்களாவர்.

பல சிறுவர்கள் பல்வேறு காரணங்களால் தொழில்களில் ஈடுபட வேண்டிய சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, யாசகம், வீதியோர விற்பனை, மற்றும் பிற அபாயகரமான வேலைகளில் ஈடுபடுவதற்கும், மனித வியாபாரத்திற்கு இரையாகுவதற்கும் சிறுவர்கள் பயன்படுத்தப்படுவதாகும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதனை தடுக்க, 2025 ஜூலை 1ஆம் திகதி முதல் 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை யாசகம் மற்றும் விற்பனை போன்ற வேலைகளில் ஈடுபடுத்துவதும், 16 முதல் 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை அபாயகரமான தொழில்களில் (உதாரணமாக வீட்டுப்பணி) ஈடுபடுத்துவதும் முழுமையாகத் தடை செய்யப்படும்.

இது தொடர்பான சட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் விழிப்புணர்வை உருவாக்கும் வேலைத்திட்டங்களை பலப்படுத்தும் வகையில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here