யாழ். சிறைச்சாலையில் சிறைக்கைதிகளின் நலன்களுக்காகவும் அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் முகமாகவும் கணினி பயிற்சி நிலையம் ஒன்று இன்று (24) திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் சீனிவாசன் இந்திர குமார தலைமையில் இடம்பெற்றது.
இலங்கையில் முதன் முறையாக யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலேயே இவ்வாறு கணினி பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்படுவதாக யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் இந்திரகுமார் தெரிவித்தார்.
சிறைச்சாலைகள் புனர் வாழ்வு பிரிவினால் கைதிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.