2022ஆம் ஆண்டில் சிறைப்படுத்தப்பட்ட கைதிகளில் நூற்றுக்கு 53 சதவீதமானவர்கள் போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டிருக்கும் புதிய கணக்காய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக 13,794 கைதிகள் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு போதைப்பொருள் குற்றத்திற்காக சிறைப்படுத்தப்பட்ட கைதிகளில் 4,406 பேர் குற்றவாளிகள் என்பதுடன் 9,388 பேர் சந்தேக நபர்களாகும்.
அதன் பிரகாரம் கடந்த 2022ஆம் ஆண்டில் 26,176 கைதிகள் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் சிறைச்சாலைகளுக்குள் இருந்துவரும் கடும் நெரிசலுக்கு, போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் காரணமாக சிறைப்படுத்தப்படுபவர்களின் அதிகரிப்பபே பிரதான காரணமாக அமைந்துள்ளதாகவும் குறித்த கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.