சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் மாதம்பே, இரட்டைக்குளம் பகுதியில் இன்று (04.07) வியாழக்கிழமை காலை 9.15 மணியளவில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் சுமார் 25 பேர் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேவாலய சந்தியில் இருந்து சிலாபம் ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த அரசு பேருந்து ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கி அதே திசையில் பயணித்த சீமெந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
லொறி ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post Views: 2