சிவனொளிபாதமலைக்குச் செல்லும் யாத்திரிகர்களே அவதானம்.!!
சிவனொளிபாதமலையை சூழவுள்ள பகுதிகளில் சுற்றாடல் மாசடைவதைத் தடுக்கும் வகையில் புதிய தடை உத்தரவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி ஒற்றைப் பயன்பாடு ,பிளாஸ்டிக் ,பொலித்தீன் பொருட்கள், லஞ்ச் ஷீட் (Lunch sheets), அதிக அடர்த்தி கொண்ட பொலித்தீன், ஒருமுறை பயன்படுத்தப்படும் மென்மையான பானங்கள் அருந்தும் குழாய், தட்டுகள், கலக்கிகள், கரண்டி, முள், கத்திகள், பிளாஸ்டிக் போத்தல், ஆகியவற்றை சிவனொளிபாதமலையில் யாத்திரிகர்கள் விற்பனை செய்வதும், வைத்திருப்பதும் முற்றாகத் தடை விதிக்க அமைச்சரவை உத்தரவு அளித்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தவும், புனித பூமியின் தூய்மையைப் பேணவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
![]()