அம்பாந்தோட்டை பகுதியில் இருந்து சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த நபர் ஒருவர் நேற்று முன்தினம் (19) மாலை மலை உச்சியில் இருந்து குதித்து உள்ளார் என சிவனொளிபாத பொலிஸ் நிலையத்தில் பெண்கள் இருவர் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்து உள்ளனர்.என தெரிய வந்துள்ளது.
இது குறித்து அம்பாந்தோட்டை வீர வில பகுதியில் இருந்து சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த ஒரு ஆண் இரண்டு பெண்களுடன் வந்த 33 வயதான தினேஷ் ஹேமந்த என்ற நபர் சிவனொளிபாத மலை இரத்தினபுரி வழியில் மலை உச்சியில் இருந்து குதித்துள்ளார் என தெரியவந்துள்ளது.
மேலும் அவரை தேடும் பணியில் கடந்த இரண்டு நாட்களாக ரக்காடு கிராமத்தில் உள்ள அதிரடிப் படையினர் மற்றும் மவுசாகலை நீர்தேக்க பகுதியில் உள்ள இராணுவத்தினர் மேற்கொண்ட போதும் தற்போது வரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கீழே குதித்த இளைஞன் குன்றில் இருந்து கீழே குதிக்கும் முன் சுயநினைவின்றி இருந்ததாக இளைஞனுடன் வந்த இரண்டு பெண்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
மேலும் குறித்த இளைஞனை தேடும் பணியை தொடர்ந்தும் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.