மலையகத்தில் ஹட்டன், கண்டி, நுவரெலியா, இரத்னபுரி, பதுளை மாவட்டங்களில் இருந்து சுமார் 30 சிவில் சமூகப் பிரதிநிதிகள் வடக்கு மாகாணத்திற்கான “நட்புறவு சுற்றுப் பயணம்” மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இச்சந்திப்பின் போது போது கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் உள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை நடத்தியுள்ளனர்.
அதேவேளை வடக்கு மாகாண அரசியல் கட்சி முக்கியஸ்தர்களையும் சந்தித்துள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை VOVCOD நிறுவனம் செய்துள்ளது என எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.