சீதுவையில் உள்ள சரக்கு விமான சேவைகள் மூலமாக தயிரில் இருந்து எடுக்கப்பட்ட புரதங்களின் பவுடர் என கூறி நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 185 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆறு பெரிய பிளாஸ்டிக் போத்தல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொதிகள் சந்தேகத்திற்கிடமானதாக காணப்பட்டதால் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் சோதனையிட்டபோது அவற்றில் போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவற்றில், 2 கிலோகிராம் 30 கிராம் கொக்கெய்ன் மற்றும் 2 கிலோகிராம் 177 கிராம் கஞ்சா வகை குஷ் போதைப்பொருட்கள் இருந்ததாக சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
போதைப்பொருட்கள், மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Post Views: 2