சீதுவை, முத்துவாடிய பிரதேசத்தில் 26 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
தன்னுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த ஆண்ணொருவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 22 வயதுடைய பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
சந்தேக நபர் நேற்று (17) பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலையொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.