சீனாவில் சுவாசத்தொகுதியுடன் சம்பந்தப்பட்ட நோய்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதன் காரணமாக ஹொங்கொங், மக்காவ் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு பயணிக்க வேண்டாமென தாய்வான் சுகாதார அமைச்சு அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் போன்றோர் இந்நாடுகளுக்கு பயணிப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, சுவாசத்தொகுதி நோய்கள் அதிகரிப்பதற்கான காரணம் குறித்து உலக சுகாதார அமைப்பு வினவிய போது, இது கொவிட் தொற்றுக்கு முன் போன்ற நிலையில் இல்லை என்றும் புதிய நோய்க்கிருமிகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் சீனா சுட்டிக்காட்டியுள்ளது.