உலக பொருளாதார மையத்தின் அழைப்பின்பேரில் சீனா நாட்டில் நடைபெறவுள்ள உலக இளம் தலைவர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான் (23) ஞாயிற்றுக்கிழமை மாலை சீன நாட்டுக்கு ஒருவாரகால உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இவருடன் நீர் வழங்கல் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் சென்றுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் உலக பொருளாதார மையத்தின் அழைப்பின்பேரில்  உலக இளம் தலைவர்களுக்கான மாநாட்டில் கலந்துக்கொண்டு அமைச்சர் விசேட உரையாற்றவுள்ளார்.

மேலும் அவர், சீன விஞ்ஞான ஆய்வகத்தின் (JRDC-Joint Research and Demonstration Center for Water Technology) அழைப்பையேற்று நீர் வளத்துறை, தோட்ட மற்றும் கிராமிய நீர்வளங்களை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுக்கான திட்டங்களை வடிவமைத்தல் தொடர்பான நிகழ்வுகளிலும் பங்கேற்க உள்ளதாக அமைச்சின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here