சீனாவில் நேற்று இரவு 6.2-ரிக்ட்டர் அளவில் பூகம்பம் பதிவாகியுள்ளது.
சீனாவின் வடமேற்கு பகுதியில் கன்சு மாகாணத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தில் 100 இற்க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 200 இற்க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
வீடுகள் முற்றாக தரைமட்டமாகியுள்ளதால் மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளிற்கு ஒடி அங்கே தஞ்சமடைந்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சில கிராமங்களிற்கான மின்விநியோகமும் நீர் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.