கொழும்பு துறைமுக நகரில் சீன பிரஜைகள் குழுவொன்றால் 3 சீன பிரஜைகள் கடத்தப்பட்டு, அவர்களில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த  ஜூலை 23 ஆம் திகதி நடந்த இந்த குற்றம் தொடர்பாக கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, விசாரணை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்படி குற்றத்திற்கு தேவைப்பட்ட சந்தேக நபர் ஒருவர் நேற்று (04) கொழும்பு துறைமுக நகரில் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் 54 வயதுடைய சீன பிரஜை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here